Breaking News

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா – Covid 19

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா – Covid 19

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ,வெளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தின் படி கொரோனா உயிரிழப்பில் கொரோனாவால் வல்லரசு நாடான அமெரிக்கா சனிக்கிழமையன்று இத்தாலியை முந்தி முதல் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா 20577 பேரின் உயிரைப் பறித்திருக்கிறது, கொரோனாவால் 527111 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களும் இத்தொற்றை பேரழிவாக அறிவித்துள்ளன.

எனினும், இத்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணங்கள் சற்று குறைந்து வருவதாக தெரிவித்த அமெரிக்காவின் தொற்று நோயியல் தலைவர் அந்தோனி ஃபாசி, இதனால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 30ஆம் தேதி வரை சமூக விலகல் மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் 1.6 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளதோடு, கொரோனா வைரசால் அமெரிக்க பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது

கொரோனா வைரஸை காட்டிலும் மோசமான மற்றும் பொருளாதார ரீதியில் சரிவை ஏற்படுத்தும் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மேலும் புரட்டி போடவுள்ளதாக வெளியான தகவலால் ஆடிப்போயுள்ளது அமெரிக்கா.

அமெரிக்கா கொரோனாவை தடுக்க முடியாமல் திண்றி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டு மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுவும் குறிப்பாக புளோரிடா மாகாண மக்களுக்கு! கொரோனாவை விட மோசமான ஒன்று வரும் ஜூன் மாதம் வரபோகிறது.

அதுதான் அட்லாண்டிக்கில் ஏற்படவுள்ள புயல் சீசன். இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில் கொரோனா மோசமானது என்றால் புயல் மிகவும் மோசமானது.

கொரோனா காலத்தில் புயலும் சேர்ந்து வருவதாக அதன் பாதிப்பு இரண்டைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும். அதுவும் பன்மடங்கு பெருகும். இந்த சீசன் ஜூன் மாதத்தில் தொடங்கும். இதனால் பொருளாதார ரீதியிலும் சரிவு ஏற்படும்.

புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றனர். அதிலும் கொலோராடோ பல்கலைக்கழகத்தின் வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.

வழக்கமான புயல் சீசனை விட இந்த ஆண்டு பாதிப்புகளும் வீரியமும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 4 முக்கிய புயல்கள் ஏற்படும். அப்போது மணிக்கு 110 மைல்கள் வேகத்தில் காற்று வீசக் கூடும். இந்த நேரத்தில் பாதிக்கப்படும் மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றி பேருந்துகளில் பொது இடங்களில் தங்க வைப்பது வழக்கம்.

ஆனால் இப்போது கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மக்களை எப்படி கும்பல் கும்பலாக தங்க வைப்பது என்பது குறித்த யோசனையில் பேரிடர் மேலாண்மைக் குழு உள்ளது. இது போன்ற சிக்கலான நேரத்தில் எப்படி சமூக விலகலை கடைப்பிடிப்பது பாதிக்கப்படும் மக்கள் உறவினர்கள் வீடுகளில் கூட தங்க வைத்துக் கொள்ளமாட்டார்கள். என்ன செய்வது என தெரியாமல் நிர்வாகம் யோசனையில் உள்ளது.

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …