Breaking News
தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழக அரசு முதல் கட்டமாக 6 லட்சம் அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும், மருத்துவம் சாரா பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தயார்நிலையில் வைத்திருக்கிறது. வருகிற 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய உடன் 2 அல்லது 3 வாரத்துக்குள் அவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். இப்போது நாங்கள் மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து விமானம் மூலம் தடுப்பூசி எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

தடுப்பூசி சென்னைக்கு வந்த உடன், முதலில் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் கிடங்குக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து குளிர்சாதன வசதி உள்ள வேன்கள் மூலம் 10 மண்டல கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் குளிர்சாதன வசதி கொண்ட வேன்களில் சென்னை உள்பட மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவையால் பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட 51 நடமாடும் குளிர்சாதன வசதி கொண்ட கிடங்குகளுக்கு (வாக்கிங் கூலர்) அனுப்பி வைக்கப்படும்.

இதற்கு அடுத்தகட்டமாக 2,618 பெரிய மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குளிர்சாதன வசதியுடன் எடுத்துச்செல்லவும், அங்கு சேமித்து வைக்கவும் திட்டம் தயார்நிலையில் உள்ளது. தடுப்பூசி போடுவதற்கு தேவையான சிறிய அளவிலான குளிர்சாதன பெட்டிகளும் அனைத்து இடங்களில் வைப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. தடுப்பூசி போடுவதற்காக பிரத்தியேகமாக 28 லட்சம் சிரிஞ்சிகள் மற்றும் ஊசிகள் வரப்பெற்று, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனைத்து மாவட்டங்களில் 226 இடங்களில் தடுப்பூசி போடும் ஒத்திகை வெற்றிக்கரமாக நடந்தது. பணியாளர்களுக்கும் தேவையான பயிற்சிகளுக்கும் அளிக்கப்பட்டுவிட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் 16-ந் தேதி தொடங்கும் நிலையில், தமிழகத்தில் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்றைய தினம் மதுரையில் அல்லது சென்னையில் தொடங்கி வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்கிறார்.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் எவ்வாறு செய்துள்ளன? அதற்காக எவ்வாறு தங்களை தயார்படுத்தியுள்ளன? மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் எவ்வாறு இருக்கிறது? முறையாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? பரிசோதனைகள் போதுமான அளவு செய்யப்படுகிறதா? என்பதை முதல்-மந்திரிகளிடம், பிரதமர் மோடி கேட்டு அறிந்துகொள்கிறார்.

மேலும் கொரோனா தடுப்பூசி போடும்போது மாநில அரசுகள் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பிரதமர் மோடி, முதல்-மந்திரிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய 2 தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட பிறகு, மாநில முதல்-மந்திரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும்.

Today rasi palan – 11.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 11, 2021)

About அருள்

Check Also

Today rasi palan – 29.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 29, 2021)

Today rasi palan – 27.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 27, 2021)

Today rasi palan – 27.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 27, 2021)   இன்றைய …