இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ்! – இந்தியாவில் முதல் ரிப்போர்ட்

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி ஒருவர் முதல் தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. சீனாவில் இந்த வைரஸால் 170 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில், சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த 800 இற்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சோதனைக்குட்படுத்தியபோது சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரைத் தனிக் கண்காணிப்புப் பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவரது உடல் நிலை சீராக இருக்கின்றது என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ்! – இந்தியாவில் முதல் ரிப்போர்ட்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்ட வாக்கெடுப்பு தள்ளிவைப்பு

 

Tamil News

 

 

 

Tamilnadu News

 

 

 

World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close