Breaking News
அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்

அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்

அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளால் வருகிற பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட கூடும் என்று ஆய்வு மதிப்பீடு ஒன்ற தெரிவிக்கிறது.

அமெரிக்கா வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை.

அந்நாட்டில் அதிக கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் உலக அளவில் முதல் இடம் பிடித்து உள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், குறைந்த அளவிலான கொரோனா திறன் சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு மருந்துகளில்லா நிலையில், குளிர்காலத்தில் பொது சுகாதாரத்திற்கு சவாலாக தொடரும் கொரோனா பாதிப்புகளை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டும்.

பெரிய அளவில் பாதிப்புகள் சரிவை நோக்கி சென்றாலும், குளிர்காலத்தில் உயரும் நிலை ஏற்படும். தொற்று விகிதம் மற்றும் மரணங்கள் ஆகியவற்றின் உயர்வு காணப்படும் சூழலில், கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதில் அடிப்படை இல்லை. அது உண்மை என நாங்கள் நம்பவுமில்லை.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட கூடும். ஆனால் ஒவ்வொருவரும் முக கவசங்கள் அணிவதன் வழியே 1.3 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது.

அதிபருக்கு மீண்டும் கூடுதல் அதிகாரம்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …