Breaking News
இலங்கையில் கொரோனா பாதிப்பு 1068 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா பாதிப்பு 1068 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா பாதிப்பு 1068 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 08 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுவரை (23.05.2020 – காலை 7.00)கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 620 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 439 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 110 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்து 753 ஆக உயர்வு

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …