Breaking News
இரு கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி!

இரு கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி!

இரு கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு கொரோனாத் தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட இரு கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு இன்றையதினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தலுக்காக வெலிசறையிலிருந்து கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்திற்கு அண்மையில் 400 கடற்படையினர் அழைத்துவரப்பட்டனர்.

அவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் 99 பேருக்கு நேற்று முன்தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு கொரோனாத் தொற்று உறுதிப்பட்ட இருவரும் வெலிகந்தை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெலிசறையில் இருந்து அழைத்துவரப்பட்டுள்ள ஏனைய கடற்படையினருக்கான பரிசோதனைகள் நாளை, மற்றும் நாளை மறுதினங்களில் இடம்பெறும் என்றார்.

இந்நிலையில் இலங்கையில் இன்றையதினம் இதுவரை 17 பேர் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்தில் இருந்த கடற்படை வீரர்கள் என்பதுடன் ஏனைய 15 பேரும் டுபாயில்ருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர்கள் ஆவர்.

சீனாவில் மேலும் 33 பேருக்கு கொரோனா

About அருள்

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …