இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு 562 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு 562 ஆக உயர்வு

சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

195 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாகப் போராடி வருகின்றன.

கொரோனா வைரசால் ஏற்பட்ட உயிரிழப்பு நேற்று 16 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதனால் உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4, 21, 413ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08, 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

ஊரடங்கை மீறி தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்

கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது

இலங்கையில் 2 வாரங்களில் கொரோனா தொற்று 20 ஆயிரமாக அதிகரிக்க கூடும்

நோர்வேயின் கொரோனா வைரஸ்: காலை நிலவரப்படி | Corona Infection Norway Updates -24-03-2020

பிரான்சில் கொரோனா வைரஸ்: இன்று காலை நிலவரப்படி | Corona Infection France Updates -24-03-2020

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close