உலக செய்திகள்முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

சீனாவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்து உள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது.

இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால் நோயின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 56 ஆக உயர்ந்தது. அங்கு 2,684 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதில் 1975 பேரை வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தீவிர சிகிச்சையில் இருக்கும் அவர்களில் 324 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை

136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்!

 

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close