Breaking News

உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் 69498 தாண்டியுள்ளது

உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் 69498 தாண்டியுள்ளது

சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் செய்வது அறியாமல் உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 13 லட்சத்தை நெருங்குகிறது.இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்தது.

அமெரிக்காவில் மட்டும் 3.36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 131,168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 12,641 ஆக உள்ளது. இத்தாலியில் 128,948 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 15,887- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளுக்கு இந்தியா உதாரணமாக விளங்குகிறது

சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை

போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி



Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …