Breaking News

யாழில் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா

யாழில் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 5 பேருக்கு வைரஸ் தாக்கம் சிறிதளவில் காணப்படுவதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதில் குறிப்பாக யாழ் மாந கரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – 6 பேர். இவர்கள் அனைவரும் அரியாலை பகுதியை சேர்ந்தவர்கள்.

கடந்த மாதம் தொற்று உறுதிப் படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று இரண்டு கிழமைக்கு முன்னர் வீடு திரும்பியவர்கள்.

நேற்றைய பரிசோதனையில் இவர்களில் ஐவருக்கு வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் சிறிதளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இவர்கள் ஐவரும் தொடர்ந்தும் இரண்டு கிழமை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

அத்துடன் இரண்டு கிழமையின் ,பின்னர் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் அறியதந்துள்ளனர். ஒருவருக்கு மீள பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரி சோதிக்கப்பட்டவர்கள் 2 பேர் (ஒரு வருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்)

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு சண்டிலிப்பாய் – ஒருவர் மீள பரிசோதனை செய்யப்பட வேண்டும் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

About அருள்

Check Also

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ? இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய …