Breaking News

கொரோனா வைரஸ் பரவல்கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை!

கொரோனா வைரஸ் பரவல்கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை!

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று தாக்கமானது நாட்டில் பூச்சியத்தை அடையவில்லை. அடுத்த வாரங்களில் நிலைமை சுமுக நிலைமைக்கு மாறப் போவதில்லை என அறிவுறுத்தும் தொற்றுநோய் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் ஹசித திசேரா, மே மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது, அவ்வாறு ஆரம்பிப்பதன் மூலமாக மாணவர்களை அதிகம் நோய் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் தாக்கம் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் என கூறப்படும் இந்த கொவிட் -19 வைரஸ் என்பது எம் அனைவருக்கும் தெரிய வந்துள்ள புதிய நோயாகும். இதற்கு முன்னர் நாம் அறிந்துகொண்ட, எதிர்கொண்ட நோய்களில் கொவிட் -19 முற்றிலும் மாறுபட்ட தொற்றுநோயாகும். உலகுக்கே கொவிட் -19 வைரஸ் பற்றி நான்குமாத கால அனுபவமே உள்ளது.

இந்த நான்கு மாதங்களில் எவ்வாறான தாக்கங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது என்பதை பார்த்து அதற்கு ஏற்றால் போலவே இப்போது வரையில் எமது முன்மொழிவுகள் அமைந்துள்ளன

இலங்கையை பொறுத்தவரையில் உலகின் நிலைமை விட மாறுபட்ட விளைவுகளையே காட்டுகிறது. அதற்கு இலங்கையின் அமைவிடம் மற்றும் காலநிலை ஒரு காரணமாக அமைந்திருக்கலாம், எவ்வாறிருப்பினும் கடந்த காலங்களை விடவும் இறுதி ஒருவார காலத்தில் நோய் தொற்றாளர்களை கண்டறியும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் மூலமாக சமூக பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்பது உண்மையே. ஆனால் இலங்கையில் இன்னமும் கொவிட் -19 வைரஸ் தொற்றுப்பரவல் பூச்சியமாக மாறவில்லை என்பதை கூறிக் கொள்கிறோம். அடுத்த வாரமளவில் நாட்டில் கொவிட் -19 தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை பூச்சியமாக மாறவும் முடியாது.

தொடர்ந்தும் தொற்றுநோய் அச்சம் உள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்த எவ்வாறான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை அனைவரும் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

அதேபோல் மே மாதம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிலும் சிக்கல்கள் இருப்பதாக நாம் கருதுகின்றோம்.

பொதுவாக மாணவர்களுக்கு நோய் தாக்கத்தின் அறிகுறிகள் மிகவும குறைவாகவே வெளிப்படுத்தும். அவ்வாறிருக்கையில் மாணவர்கள் இடையில் ஏதேனும் நோய் பரவல் ஆரம்பித்தால் அது மிகப்பெரிய தக்கமொன்றை உருவாக்கும்.

ஆகவே பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் நோய் தடுப்புக்கான விசேட வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டியுள்ளது. என்றார்.

கொரோனா: எண்ணிக்கை 700 ஐ நெருங்கியது!கொரோனா: எண்ணிக்கை 700 ஐ நெருங்கியது!

Today rasi palan 02.05.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 02 மே 2020 சனிக்கிழமைToday rasi palan 02.05.2020 Saturday – இன்றைய ராசிப்பலன் 02 மே 2020 சனிக்கிழமை

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …