Breaking News

காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (14) முதல் காணாமல்போய் இருந்த நிலையில், குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

காணாமல்போய் உயிரிழந்தவர் நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராகக் கடமையாற்றிய அன்ரனிஸ் நிமால் (வயது – 30) எனத் தெரியவந்துள்ளது.

கடந்த 14ஆம் திகதி இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அன்று இரவு 11 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பில் முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததோடு, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குறித்த குடும்பஸ்தரை தொடர்ச்சியாகத் தேடியும் வந்தனர்.

இந்தநிலையில் நறுவிலிக்குளம் பகுதியில் உள்ள பொது மயானப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் சடலத்தைக் கண்ட வயோதிபர் ஒருவர் பங்குத் தந்தைக்கு அறியப்படுத்தினார்.

பங்குத் தந்தை பொலிஸார் மற்றும் கிராம அலுவலகர் ஆகியோருக்குத் தகவல் வழங்கினார். சம்பவ இடத்துக்கு முருங்கன் பொலிஸார் மற்றும் விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த சடலம் கடந்த சனிக்கிழமை காணாமல்போன நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராகக் கடமையாற்றிய தனது கணவரான அன்ரனிஸ் நிமால் (வயது – 30) என்பவருடையது என்று அவரது மனைவி அடையாளம் காட்டினார்.

பின்னர் மன்னார் பதில் நீதிவான் இ.கயஸ்பெல்டானோ பிற்பகல் 2 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைப் பார்வையிட்டார்.

பதில் நீதிவானின் உத்தரவுக்கு அமைவாக பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About விடுதலை

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …