Breaking News

3 மாவட்டங்களில் ஆரம்பமானது வாக்கு எண்ணும் பணிகள்..!

3 மாவட்டங்களில் ஆரம்பமானது வாக்கு எண்ணும் பணிகள்..!

9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று மாலை நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இதற்கமைய அநுராதபுரம், பொலன்னறுவை, மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு

இன்று காலை 8 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகின. இந்நிலையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 99 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள 139 வாக்குச் சாவடிகளில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. குறித்த நிலையங்களில் அஞ்சல் மூல வாக்குகளும் எண்ணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அருகில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு

About அருள்

Check Also

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு ‘ விருப்பு வாக்கு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட …