Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / சரத்குமார், ராதிகாவுக்கு பிடிவாரண்ட் – சென்னை நீதிமன்றம் உத்தரவு !
சரத்குமார்

சரத்குமார், ராதிகாவுக்கு பிடிவாரண்ட் – சென்னை நீதிமன்றம் உத்தரவு !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ரேடியன்ஸ் மீடியா எனும் நிறுவனத்திடம் பெற்ற தொகையைத் திருப்பிச் செலுத்தாத ராதிகா மற்றும் சரத்குமாருக்கு வாரண்ட் பிறப்பித்துள்ள்து சைதாப்பேட்டை நிறுவனம்.

திரைப்படம் தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மேஜிக் ஃபிரேம்ஸ் எனும் நிறுவனம் ரூ 2 கோடி கடனாகப் பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார், ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் உள்ளனர்.

ஆனால் அந்தக் கடனை இன்னும் திருப்பி செலுத்தாமல் உள்ளதாக சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதுசம்மந்தமாக நேற்று நடைபெற்ற இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் ஆஜரராகதால் அவர்களுக்கு இவர்கள் மூவருக்கும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

சிரியா

தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி: பின்வாங்குமா குர்து படைகள்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! சிரியாவில் குர்திஷ் படைகள் பாதுகாப்பான முகாம்களுக்கு திரும்புவதற்காக துருக்கிப் படைகளுடன் அமெரிக்கா 120 மணி நேர …