Breaking News
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை மாநகராட்சி வெளியிடும் கொரோனா தொற்று குறித்த புள்ளிவிவரத்தில் சில முரண்பாடு உள்ளது. எனவே கொரோனா தொற்றால் மாநகரங்கள், மாவட்டங்கள் அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரியானதாக இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து விவரங்களையும் ஒன்றாக வெளியிட வேண்டும். செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் அரசு இணையதளம் சேவையை 2 வாரத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

திருமண நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடும்போது, அவர்கள் முறையாக முக கவசம் அணிந்துள்ளனரா? சமூக இடைவெளியை கடைப்பிடிக்கின்றனரா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.

அதில், யாராவது முக கவசம் அணியவில்லை என்றால் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் அடிப்படையில், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் வழங்க சாத்தியம் உள்ளதா? என்பதையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இதுபோன்ற நிலைமை இனியும் தொடர்ந்தால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டிப்பாக பல மடங்கு அதிகரித்துவிடும்.

எனவே, இந்த உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தமிழக அரசு வருகிற 16-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

டிக்-டாக் செயலி மீதான தடைக்கு: இடைக்கால தடை

About அருள்

Check Also

யாழில் கோர விபத்து - சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த …