Breaking News

சவுதி அரேபியாவில் ஊரடங்கு தளர்வு

சவுதி அரேபியாவில் ஊரடங்கு தளர்வு

சவுதி அரேபியாவில் கொரோனாவால் சுமார் 139 பலியாகியுள்ள நிலையில் சுமார் 17522 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதிய நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்த இன்றைய நகரங்களின் பட்டியலில் 294 பாதிப்புகளுடன் ஜித்தா முதலிடத்திலும், 218 புதிய பாதிப்புகளுடன் மக்காவும், 202 பாதிப்புடன் மதீனாவும், ரியாத் 178 மற்றும் 126 பாதிப்புடன் பாசிஹும் உள்ளது.

ரமலான் நோன்பை முன்னிட்டு சவுதி அரேபியா சில கட்டுப்பாடுகளையும் ஊரடங்கு உத்தரவுகளையும் தளர்த்தியிருந்தாலும், தேவைப்படும் போது மட்டுமே வெளியே செல்லவும், முககவம்ச் அணியவும், சமூக தூரத்தை பராமரிக்கவும், கூட்டத்தைத் தவிர்க்கவும் அதிகாரிகள் தொடர்ந்து மக்களை வற்புறுத்துகிறார்கள்.

சவுதிஅரேபியாவில் கொரோனா ஊரடங்கை தளர்த்த அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் உத்தரவிட்டுள்ளதாக அதிகார பூர்வ உத்தரவை மேற்கோள் காட்டி அரசு நடத்தும் சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 13 வரை மெக்கா நகரம் மற்றும் சில் குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு உத்தரவை தளர்த்த உத்தரவிட்டப்பட்டுள்ளது.

சில்லறை கடைகள், ஷாப்பிங் சென்டர்கள் மீண்டும் திறக்கப்படுவதையும் கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்குவதையும் இந்த உத்தரவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் சமூக இடைவெளி மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் கவனிக்கப்படாவிட்டால் உணவகங்கள், சினிமாக்கள், அழகு நிலையங்கள் மற்றும் பிற வசதிகளை மூடுவதா என்பதை தீர்மானிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விட்டுவிடுதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

600 ஐ நெருங்கிய தொற்றாளர்கள் எண்ணிக்கை – வெலிசறை கடற்படை முகாம்

சவூதியில் வணிக நிறுவனங்கள் தொடங்குவதற்கான நிபந்தனைகள்

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …