Breaking News

பிரான்சு,நோர்வே,ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வர தற்காலிகத் தடை

பிரான்சு,நோர்வே,ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டினர் இந்தியா வர தற்காலிகத் தடை

சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 61 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பிரான்ஸ், நோர்வே,ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாட்டினர் இந்தியா வருவதற்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசாக்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்மூன்று நாடுகளை சேர்ந்தவர்களை தவிர இங்கு கடந்த 1-ஆம் தேதிக்கு பின்னர் சென்ற பிற நாட்டினருக்கும் இந்தியாவுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வர தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

உகான் சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

மாணவியை அழைத்துச் சென்று சீரழித்த ஆட்டோ காவாலி

கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் நீட்டித்தது இத்தாலி

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 26.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 26, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)

Today rasi palan – 24.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 24, 2021)   இன்றைய …