கொரோனா பாதிப்பால் இன்னும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்

கொரோனா பாதிப்பால் இன்னும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்

கொரோனா பாதிப்பால் இன்னும் மோசமான பாதிப்புகள் ஏற்படும்

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இதுவரை இல்லாத வகையில் சர்வதேச பொருளாதாரம் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் பணக்கார நாடுகளை காட்டிலும் ஏழை நாடுகள் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றன.

அந்நாடுகளில் காணப்படும் பொருளாதார மந்தநிலை மற்றும் மோசமான சுகாதார கட்டமைப்பு உள்ளிட்டவை மீளா துயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

கொரோனாவால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் ஏராளமான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து சமீபத்தில் எச்சரித்த ஐநா சபை இந்த கொரோனாவால் மேலும் 10 கோடி மக்கள் தீவிர வறுமைநிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐநா தெரிவித்திருந்தது.

இது குறித்து ஐநா சபையின் வறுமை தொடர்பான நிபுணர் ஆலிவர் டி ஷட்டர் கூறியதாவது:-

கொரோனாவால் வறுமைக்கு தள்ளப்படுபவர்களின் எண்ணிக்கை இன்னும் மோசமான நிலைக்கு செல்லவில்லை. ஆனால் இதை தடுக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தும் குறுகிய காலகட்டத்துக்கானவை. நிதி போதுமானதாக இல்லை மற்றும் பலர் தவிர்க்க முடியாத வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

வறுமையை ஒழிப்பதற்கும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும் இன்னும் தீர்க்கமான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும். 1930 ஆம் ஆண்டுகளில் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் அமைதி காலங்களில் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி என்பது எதிர்பார்க்காத ஒன்று.

மேலும் அரசாங்கங்கள் சமூக திட்டங்களுக்கு உதவுவதாக உறுதியளித்திருந்தாலும், உலகின் ஏழ்மையான மக்கள் பெரும்பாலும் டிஜிட்டல் கல்வியறிவு அல்லது இணைய அணுகல் இல்லாததால் பெரும்பாலும் விலக்கப்படுகிறார்கள்.

வறுமையில் உள்ள குடும்பங்கள் இப்போது தங்களிடம் இருந்த சொத்துக்களை விற்றுவிட்டனர். வறுமை மீதான நெருக்கடியின் மோசமான தாக்கங்கள் இன்னும் வர உள்ளன என கூறினார்.

பெரு நெருப்பால் பேரழிவு… ஒரே மாதத்தில் 24 பேர் பலி

ஜோர்டானில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து

About அருள்

Check Also

அதிபர் டிரம்ப் மீது மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டு

அதிபர் டிரம்ப் மீது மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டு

அதிபர் டிரம்ப் மீது மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டு அமெரிக்காவில் ஏமி டோரிஸ் என்கிற மாடல் நடிகை அதிபர் டிரம்ப் …