இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது.

கொரோனா வைரசால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசுக்கு 4 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு உயிர்பலியை கொரோனா வாங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புடன் மராட்டியத்தில் சிகிச்சை பெற்று வந்த 63-வயது நபர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்தார். இதன் மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று இரவு உயிரிழந்த 63-வயது முதியவருக்கு நீண்ட காலமாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த ழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

Today rasi palan 22.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் 258 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் 258 ஆக உயர்வு!

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close