Breaking News

வடமராட்சி கிழக்கு கலாச்சாரத்தை மாற்றப்போகும் கலாச்சார சீர்கெட்ட ஆடலும் இசை நிகழ்ச்சியும்!

வடமராட்சி கிழக்கு கலாச்சாரத்தை மாற்றப்போகும் கலாச்சார சீர்கெட்ட ஆடலும் இசை நிகழ்ச்சியும் . இதை தடுக்க எவருமே முன்வர வில்லை…

இதற்கு அனுசரணையாளராக இருப்பவர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

நீங்கள் ஆடலும் இசை நிகழ்ச்சியும் என்ற பெயரில் எமது இளைய சமுதாயத்தை சீரழிக்கும் செயற்பாட்டை மாற்றும்படி கேட்டுக் கொள்கிறோம்.

எதிர்வரும் 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று உடுத்துறை அரசடிமுருகன் ஆலயமுன்றலில் பிரமாண்டமான மேடையில் ஆடலுடன்பாடல் என்ற பெயரில் எமது கலாச்சாரத்தை அழிக்கும் நடவடிக்கைகளை சிலர் செய்து வருகிறார்கள்.

இந்தநிகழ்வின் அனுசரனையாளர்களாக இருக்கும் .அவுஸ்ரேலியா நாட்டில் வாழும் ஐக்கியதீபம் சிவமோகன்(பிரபு) இராமசாமி லகீதரன் (லகி) ஆகிய எமது உறவுகளே நீங்கள் இசை நிகழ்வுக்கு அனுசரணை வழங்குங்கள் எமது பிரதேசத்தின் பண்பாடு கலாச்சாரம் பற்றி ஒரு கணம் சிந்தியுங்கள்.

பல இலட்சம் பணத்தை செலவு செய்யும் நீங்கள் இந்த மண்ணில் மாவீரராகி போன பின்னர் அவர்களது குடும்பங்கள் ஒருவேளை உணவுக்காக படும் கஷ்ரங்கள் பற்றி யோசித்து பார்த்ததுண்டா???

வடமராட்சி கிழக்கு மாவீரர்துயிலுமில்லம் காடு போல தோற்றமளிக்கிறது. இதை பற்றி ஒரு நிமிடம் யோசித்து பார்த்ததுண்டா???

நீங்கள் வெளிநாடு போய் விசா எடுக்க மாவீரர்கள் வேண்டும். ஆனால் அந்த மாவீரர்களது குடுபங்கள் நடுவீதியில் நிற்க நீங்கள் அதே ஊரில் களியாட்டம் செய்வதா???

அனுசரணையாளரே ஒரு கணம் சிந்தியுங்கள் உங்கள் இருவரதும் எத்தனை நண்பர்கள் நண்பிகள் இந்த மண்ணுக்காக மடிந்து போனார்கள்???? அவர்களை என்றாலும் சிந்தித்து பாருங்கள்…

யாழ்ப்பாணத்தில் எமது வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் போதைவஸ்து பழக்கத்திற்கு அண்மைய நாட்களில் அடிமையாக மாறுவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் வடமராட்சி கிழக்கில் பல கலாச்சாரத்தை சீரழிக்கும் சம்பவங்கள் இடம்பெறுவது மிகவும் வேதனையாக உள்ளது.

எமது வடமராட்சி கிழக்கில் யுத்தத்தின் பின்னர் களவு ,கஞ்சா, ஊருக்குள் போதைவஸ்து விற்பனை, கடல்நீர் நன்னீராக்கும் திட்டம், காணிசுவீகரிப்பு, காணாமல் போனவர்களின் போராட்டம், அட்டை பிடிக்கும் பிரச்சினை இப்படி எத்தனை பிரச்சிகள் நடந்து கொண்டு இருக்கு அதுல எதாவது ஒரு பிரச்சினையை தீர்க்க நீங்கள் பங்களிப்பு செய்தீர்களா???

உங்களது மனசாட்சியினை தொட்டு பாருங்கள்.. நீங்கள் செய்வது சரியா???

உறவுகளே களியாட்ட நிகழ்வுகளை நிறுத்தி இசைநிகழ்வுகளை மட்டும் நடத்துமாறு கேட்டு கொள்கிறோம்…

எம் மண்மீது பற்றுக்கொண்டோன்

About அருள்

Check Also

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. …