Breaking News
ஜெர்மனியில் ஜனவரி இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜெர்மனியில் ஜனவரி இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜெர்மனியில் ஜனவரி இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த முழு ஊரடங்கு டிசம்பர் 16-ந் தேதி தொடங்கி ஜனவரி 10-ந் தேதி வரை அமலில் இருக்கும் என ஜெர்மனி அரசு அறிவித்தது.

இந்த ஊரடங்கில், முழுவதும் சூப்பர் மார்க்கெட் போன்ற மிகவும் அத்தியாவசியமான கடைகள் மட்டுமே திறந்திருந்தன. ஓட்டல்கள், மதுபான விடுதிகள், ஓய்வு விடுதிகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. அதேபோல் மக்களின் பணத்தேவைக்காக வங்கிகள் திறந்திருக்கும் என்றும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புது வருட பிறப்புக்கு பின்னரும் ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக, புதிய கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஜனவரி இறுதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்புகளை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் வெளியிட்டு உள்ளார்.

Today rasi palan – 06.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 06, 2021)

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …