Breaking News

நாடு முழுவதும் இன்று ஊரடங்குச் சட்டம் அமுல்

நாடு முழுவதும் இன்று ஊரடங்குச் சட்டம் அமுல்

நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை ஊரடங்கு நிலை அமுல் செய்யப்படவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 24 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நிலைமை, இன்று அதிகாலை 5.00 மணிக்கு 21 நிர்வாக மாவட்டங்களில் தளர்த்தப்படவிருந்தது.

எனினும் நாட்டில் முப்படையினரின் விடுமுறைகளை இரத்துச் செய்ய நேற்று (26) மாலை பாதுகாப்பு அமைச்சு அவசர தீர்மானத்துக்கு வந்தநிலையில், விடுமுறையில் உள்ள இராணுவ , கடல் மற்றும் விமானப் படையினரை அவரவர் சேவை முகாம்களுக்கு திரும்பவும் அவசர உத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையிலேயே, முப்படையினர் குறித்த முகாம்களுக்கு திரும்ப வசதியாகவும் , அவ்வாறு திரும்பும் போதுபொது மக்களுடன் எந்தக் கலப்பும் இல்லாமல் அவர்கள் முகாமுக்கு திரும்புவதை உறுதி செய்யும் விதமாகவும், நாளை முழுதும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர இன்றிரவு ஜனாதிபதி செயலகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி நாளை முழுதும் நீடிக்கும் ஊரடங்கானது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் மறுநாள் அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் பின்னர் மீள அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு 9 மணி நேர ஊரடங்கு வழமை போல் அமுல் செய்யப்படும் எனவும் ஜனாதிபதி செயலகம் கூறியது. அதன் பின்னர் தொடர்ச்சியாக மே முதலாம் திகதிவரை இரவு நேரத்தில் மட்டும் இரவு 8.00 மணியில் இருந்து அதிகாலை 5.00 மணி வரையிலான 9 மணி நேர ஊரடங்கு நிலை மட்டும் அமுல் செய்யப்படவுள்ளது.

முன்னதாக அனைத்து முப்படையினரதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இன்று மாலை அறிவித்திருந்தது. மறு அறிவித்தல்வரை முப்படை அதிகாரிகள், அப்படைகளில் பதவிகளிலுள்ளோரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

இதனடிப்படையில், தற்போது விடுமுறையிலுள்ள அதிகாரிகள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்ட பின்னணியிலேயே நாட்டின் ஊரடங்கு தளர்த்தல் நிலையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

உலக அளவில் 30 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

கிம் ஜாங் உன் இறந்து விட்டாரா ??? – வட கொரிய அதிபர்

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …