குவைத்தில் விரைவில் ஊரடங்கு நீக்கம்

குவைத்தில் விரைவில் ஊரடங்கு நீக்கம்

குவைத்தில் விரைவில் ஊரடங்கு நீக்கம்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குவைத் அரசாங்கம் அமல்படுத்தியிருந்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவானது வரும் ஆகஸ்ட் 30 ம் தேதியுடன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் குவைத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர், ஜூலை மாதத்தில் அந்நாட்டில் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்புவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக ஒன்பது மணி நேர ஊரடங்கானது ஆறு மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

இருப்பினும், பொது மற்றும் தனியார் இடங்களில் திருமண விருந்துகள், வரவேற்புகள் மற்றும் துக்க விழாக்கள் உள்ளிட்ட பெரிய கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையானது நீடிக்கும் என்றும் குவைத் அரசாங்கம் தெரிவித்திருந்மை குறிப்பிடத்தக்கது.

விக்னேஸ்வரின் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு பலனற்றவை- அமைச்சர் டக்ளஸ்

கொரோனா வைரஸ் தொற்று நோய் 2 ஆண்டுகளில் முடிந்து விடும்

About அருள்

Check Also

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்

கல்வி அமைச்சின் விசேட தீர்மானம் நாட்டில் உள்ள பிரதான 06 பொறியியல் பீடங்களில் இந்த வருடம் மேலதிகமாக 405 மாணவர்களை …