Breaking News
இன்றும், நாளையும் ஊரடங்கு சட்டம்

இன்றும், நாளையும் ஊரடங்கு சட்டம்

இன்றும், நாளையும் ஊரடங்கு சட்டம்

நாடுமுழுவதும் இன்றும், நாளையும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுளளது.

இதன்படி, 26 ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை மட்டுமே அமுலாக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று பிற்பகல் இந்த அறிவித்தலை வெளியிட்டது.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல், கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றும், நாளையும் நாடு முழுவதும் 900 தற்காலிக காவல்துறை அரண்கள் அமைக்கப்படுவதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

முன்னர் போன்றே அனைவரும் ஊரடங்கு சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்.

குழுக்களாக வெளியில் செல்லுதல், குழுக்களாக இணைந்து செயற்படுதல், மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களை பகிர்தல் மற்றும் விற்பனை செய்தல் முதலான செயற்பாடுகள் ஊரடங்கு காலப்பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளன.

குறித்த காலப்பகுதியில் காவல்துறையினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, புலனாய்வு பிரிவினர் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

காவல்துறையினரால் விசேட சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், வாகனங்களை சோதனையிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இன்றும், நாளையும், நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள நிலையில் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட வேண்டும் என மதுவரித் திணைகக்ளம் அறிவித்துள்ளது.

முக்கிய 26 பொருட்களுக்கே வர்த்தக வரி

About அருள்

Check Also

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ? இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய …