Breaking News
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்

வங்கக் கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலையில் கரையை கடந்து தற்போது பாம்பனுக்கு 110 கி.மீ., குமரிக்கு 310 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்தில் மன்னார் வளைகுடா அருகே நிலைகொள்ளும் என்றும் பாம்பன் – கன்னியாகுமரி இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயலால், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

திரிகோணமலைக்கும் – முல்லைத்தீவுக்கும் இடையே புரெவி புயல் கரையை கடந்த போது, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயலால், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு வெள்ளத்தில் மிதக்கின்றன. தொடர் மழையால், யாழ்ப்பாணம் மாகாணத்தில் 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாகாணத்தில் 15 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 141 வீடுகள் பாதி சேதம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கிலிநொச்சியில் 279 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Today rasi palan – 03.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 03, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 26.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 26, 2021)

Today rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 25, 2021)

Today rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 25, 2021)   இன்றைய …