Breaking News

வடகொரியாவின் அணு உலைக்கு சேதம் எனத் தகவல்

வடகொரியாவின் அணு உலைக்கு சேதம் எனத் தகவல்

கொரிய தீபகற்பப் பகுதியில் வீசிய புயலால் வடகொரியாவின் அணு தயாரிப்புக் கூடம் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரிய தீபகற்பப் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பலத்த புயல் வீசியது. இதன் காரணமாக வடகொரியாவில் உள்ள யோங்பியோன் அணுக்கரு ஆராய்ச்சி மையம் கடும் சேதத்திற்குள்ளானதாக 38 நார்த் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

அந்த அணு உலைக்கு நீரை உட்செலுத்தும் குர்யாங் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த அணையும் புயலால் சேதமானதாகவும், இதனால் உலையைக் குளிர்விக்கத் தேவையான இயங்கு சக்தி கிடைக்காமல் அணு உலை மூடப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த செயற்கைக் கோள் புகைப்படத்தினையும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடி

About அருள்

Check Also

யாழில் கோர விபத்து - சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி

யாழில் கோர விபத்து – சாரதி பலி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த …