Breaking News
டேனி-மகத்

ஒத்தைக்கு ஒத்த பாத்தர்லாம் வாடா; டேனி-மகத் இடையே முற்றும் மோதல்!

பிக் பாஸ் வீட்டில் டேனி மற்றும் மகத் இடையே ஏற்பட்ட மோதல் முற்றியது போல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 59 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிய விஷயமாக உள்ளது. ஐஸ்வர்யாவின் ‘சர்வாதிகார ராணி’ டாஸ்க்கிற்கு பின் பெரிதாக எதுவும் நடக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது மக்களிடையே பரபரப்பாக பேச வைக்க கடந்த வாரம் கமல்ஹாசனும் வீட்டிற்குள் சென்று வந்துவிட்டார். எனினும், பரபரப்புக்கான கண்டண்ட் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இன்றைய டாஸ்க்கில் மகத் மற்றும் டேனியிடையே ஏற்பட்டுள்ள தள்ளுமுள்ளு தகராறில் ஏதேனும் சுவாரஸ்யம் இடம்பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். டாஸ்க்கில் கவனம் செலுத்திவந்த இருவரும், யாரோ ஒருவர் ஆடிய கள்ளாட்டத்தில் ஆத்திரமடைந்து ஒத்தைக்கு ஒத்த மோதவும் தயாராகிவிட்டனர்.

டேனி-மகத் இடையே மோதல் வெடிக்குமா அல்லது புஸ்வானமாக கத்திவிட்டு சாந்தமாவர்களா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …