சினிமா செய்திகள்

தர்பார் மற்றும் பட்டாஸ் படங்களின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருப்பதால் ரஜினி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

தர்பார் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவர உள்ளது என்பதை படக்குழுவினர் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர். இந்த தகவலை நாளைய இசை வெளியீட்டின் போது அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பொங்கல் நாளில் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்றாலும் திரையுலக வட்டாரங்களில் பொங்கல் தினத்தில் தர்பார், பட்டாஸ் ஆகிய இரண்டு படமும் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சத்யஜோதி நிறுவனம் தரப்பில் இருந்து கசிந்த செய்தியின்படி பட்டாஸ் திரைப்படம் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பொங்கலுக்கு மறுவாரம் இந்த படம் ரிலீசாகும் என்று தெரிகிறது

விநியோகஸ்தர்களிடம் நடக்கும் வியாபாரமும் இந்த ரிலீஸ் தேதியை வைத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் மற்றும் அவரது மருமகன் தனுஷின் பட்டாஸ் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

[poll id=”2″]

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

https://youtu.be/VLFDcUCsPW4

Tags
Show More

Related Articles

Back to top button
Close