இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

மகள் தற்கொலை: தாய் தீயில் எரிந்து சாவு!

- யாழில் தொடரும் சோகங்கள்

மகள் தற்கொலை செய்துகொண்ட துயரம் தாங்காது தனக்குத்தானே தீ மூட்டிய தாயாரும் உயிரிழந்தார்.

யாழ். கொக்குவில், அரசடிப்பகுதியில் மகேஸ்வரன் தவேஸ்வரி (வயது – 48) என்பவரே இவ்வாறு தீயில் எரிந்து சாவடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது:-

குறித்த பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டிருந்தார். மகள் இறந்த நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்தபோது குறித்த தாய், வீட்டு அறையைப் பூட்டிவிட்டு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

அவர் தீயில் எரிவதைக் கண்ட பொலிஸார் அறையின் கதவை உடைத்துத் தீயைக் கட்டுப்படுத்தியதுடன் எரிகாயங்களுக்குள்ளான தாயை மீட்டு அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், பலத்த எரிகாயங்களுக்குள்ளான அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று சனிக்கிழமை சாவடைந்துள்ளார்.

திடீர் மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிறேம்குமார் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close