Breaking News
பிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

பிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

பிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 19,715 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று பாதிப்பு எண்ணிக்கை 20,586 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் இதே போன்று பாதிப்பு எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,37,048 ஆக உள்ளது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 78,965 ஆக உயர்ந்துள்ளதாகவும், தற்போது 27,369 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 11, 2021)

Today rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 11, 2021)   இன்றைய …