இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

டெல்லியில் பயங்கர தீ விபத்து… 43 பேர் உடல் கருகி உயிரிழப்பு

டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியின் ராணி ஜான்சி சாலை அனாஜ் மார்க்கெட் பகுதியில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து சிறிது நேரத்தில் மளமளவென அனைத்து இடங்களில் வேகமாக பரவியது.

இதனால், அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதில், 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 56 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உடனே இதுதொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தீ விபத்து தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரமேர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் பயங்கர தீ விபத்து

டெல்லியில் பயங்கர தீ விபத்து

டெல்லியில் பயங்கர தீ விபத்து

[poll id=”2″]

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

https://youtu.be/VLFDcUCsPW4

Tags
Show More

Related Articles

Back to top button
Close