Breaking News
ஏதாவது தப்பு

ஏதாவது தப்பு பண்ணிருந்தா என்ன மன்னிச்சிடுங்க

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெறியேறிய டேனியல் தனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

போட்டி முடிய இன்னும் சில வாரங்களே மீதமுள்ள நிலையில் சண்டை சச்சரவுக்குக் குறைவில்லாமல் பிக்பாஸ் சீசன் 2 இருக்கிறது.

கடந்த வாரம் நடந்த ஃப்ரீஸ் டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் அந்தர் பல்டி அடித்து பாச மழையைக் கொட்டி தீர்த்தனர்.

இதையடுத்து நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து டேனியல் வெளியேற்றப்பட்டார்.

டேனியல் தான் பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் மக்களின் வாக்குகளைக் குறைவாக பெற்ற காரணத்தால் அவர் வெளியேற்றப்பட்டார்.

கடந்த சில வாரங்களாக அவரது யுக்தி சரியாக அவருக்கு கை கொடுக்கவில்லை.

இதைக் கமல் ஹாசன் நேற்றைய நிகழ்ச்சியில் டேனியலிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் டேனியல் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் , ‘எனக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு ரொம்ப நன்றி.

இந்த 78 நாட்கள் எனக்கு நீங்க ஆதரவா இருந்தீங்க, ஆனா இன்னும் 78 வருஷம் ஆனாலும் உங்க சப்போர்ட் எனக்கு வேணும்.

நெறைய மீம்ஸ் போட்டு கலாய்ச்சிருக்கீங்க ,ஆனா நல்லா தான் இருக்கு.

நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா என்னை மன்னிச்சிடுங்க.

அதே சமயம் நான் நல்லது பண்ணிருந்தா எனக்கு சப்போர்ட் பண்ணுங்க’ என்று கேட்டு கொண்டுள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …