Breaking News
மேச்சலுக்கு கட்டிவிட்ட பசுமாட்டை இறைச்சியாக்கிய நாசகாரிகள்!

மேச்சலுக்கு கட்டிவிட்ட பசுமாட்டை இறைச்சியாக்கிய நாசகாரிகள்!

மேச்சலுக்கு கட்டிவிட்ட பசுமாட்டை இறைச்சியாக்கிய நாசகாரிகள்!

முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் மேச்சலுக்காக கட்டிவிட்ட பசுமாட்டினை கொலைசெய்து இறைச்சியாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடையார்கட்டு குளத்து வீதியில் அண்மைக் காலமாக பலரின் மாடுகள் சமூகவிரோதிகளால் இறைச்சிக்காக கொலைசெய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவம் 21.06.2020 அன்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான அச்சுறுத்தலால் உடையார்கட்டு தெற்குப் பகுதியில் கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை வளர்க்கமுடியாத நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.

அண்மைக்காலமாக மூன்று மாடுகள் வெட்டப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்பகுதியில் படையினரின் சோதனை நிலையம் ஒன்று அமையுமாக இருந்தால் இவ்வாறானவர்கள் கண்காணிக்கப்பட்டு சட்டவிரோத செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்படும் என கால்நடை வளர்ப்போர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

விடுதலைப் புலிகள் தொடர்பான செயலி குறித்து பாதுகாப்பு தரப்பினர் வெளியிட்டுள்ள தகவல்


About அருள்

Check Also

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் - முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை 20ம் திருத்தச் சட்ட மூலத்தின் வரைவினை ஆராய்வதற்காக பிரதமர் மகிந்தராஜபக்ஷவினால் …