Saturday , July 20 2019
Home / சினிமா / அடுத்த கமல் தனுஷ் தான் என்று நடிகை கஸ்தூரி பாராட்டு; காரணம் என்ன?
கஸ்தூரி
நடிகை கஸ்தூரி

அடுத்த கமல் தனுஷ் தான் என்று நடிகை கஸ்தூரி பாராட்டு; காரணம் என்ன?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வடசென்னை படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் தனுஷை அடுத்த கமல் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வடசென்னை. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தாயரித்துள்ளது.

இப்படத்தில் ராம், இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ஹீரோவுக்கான இலக்கை உடைத்தெறிந்த தனுஷின் 35வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில், ஒருத்தன் செத்தா முடியுற சண்டையாடா இது? என மிரட்டல் வசனத்தில் பேசும் தனுஷ், போலீஸ் கலவரத்தின் இடையே திருப்பி அடிக்கலைனா, இவனுங்க நம்மல அடிச்சு ஓடவிட்டுக்கிட்டே இருப்பானுங்க என்ற வசனத்தையும் பேசியிருக்கிறார்.

கடந்த 2 வருடங்களாக இப்படம் உருவாகி வந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த மாதம் படக்குழுவினர் வெளியிட்டனர். தற்போது டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை : உண்மை நிலவரம் என்ன?


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

பெற்ற மகனையே கழுத்தை நெறித்து கொலைமுயற்சி செய்த வனிதா!

பெற்ற மகனையே கழுத்தை நெறித்து கொலைமுயற்சி செய்த வனிதா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!5Sharesபிக்பாஸ் வீட்டிலிருக்கும் சொர்ணாக்கா வனிதா கொடிய ராட்சசி எனவும் அவர் முகமூடியை அணிந்து கொண்டு அங்கு நாடகமாடுகிறார் …