தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன்

சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் நேற்று கோவில் ஒன்றுக்குச் சென்றபோது அங்கு செருப்பை கட்டுவதற்காக 14 வயது சிறுவர் ஒருவரை அழைத்து செருப்பை கழற்ற சொன்னார்.

இது குறித்த வீடியோ மற்றும் செய்திகள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காவல்நிலையத்தில் அமைச்சர் சீனிவாசன் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்பதும் இது குறித்த விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஊடகங்களால் பெரிதாக்கப்பட்ட இந்த பிரச்சனையை மேலும் பெரிதாக்க விரும்பாமல் சம்பந்தப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் ஊட்டி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார் என்றும், இன்று சிறுவனின் குடும்பத்தார் விருந்தினர் மாளிகைக்கு அழைக்கப்பட்டதாகவும் அவர்களிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது

முன்னதாக சிறுவனின் தாயார், சிறுவனை அமைச்சர் நடத்திய விதம் குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இன்று நடைபெறும் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சிறுவனின் குடும்பத்தினர் சமாதானம் அடைவார்கள் என்று எதிர்பார்க்கபப்டுகிறது

பல்கலை மாணவ சமூகத்தினால் யாழ். சமூகத்துக்கே பேரவமானம்!

இன்றைய ராசிப்பலன் 07 பெப்ரவரி 2020 வெள்ளிக்கிழமை – Today rasi palan 07.02.2020 Friday

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close