ரஜினியை ஏன் இளமையாக்க வேண்டும்?

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

இன்று வெளியாகியுள்ள தர்பார் படத்தில் என்னதான் ரஜினிகாந்த் ஸ்டைலாகவும், அழகாகவும், இளமையாகவும், கவர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தாலும் அவருக்கு வயது 70 என்பது நம் மனதில் ஊறிய ஒரு விஷயம். அதை யாராலும் அழிக்க முடியாது

எழுபது வயதில் இந்த இந்த அளவுக்கு அழகாக இருக்கின்றாரே, சுறுசுறுப்பாக சண்டை போடுகிறாரே என்று நாம் பேசுவதை பேசுவதை விட, எழுபது வயதில் ஒருவரால் என்ன சாதிக்க முடியுமோ அதை செய்ய வைப்பதுதான் ஒரு இயக்குனரின் கடமை என்று நடுநிலை ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
ரஜினியை ஏன் இளமையாக்க வேண்டும்
70 வயது மனிதரை 17 வயது இளைஞராக காட்ட வேண்டிய அவசியம் என்ன? ஏன் 70 வயதில் நபருக்கேற்ற ஒரு நல்ல கேரக்டர், ஒரு நல்ல கதை அமையாதா? அப்படி ஒரு கதையை ரஜினிக்காக தேர்வு செய்ய முடியாதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

ரஜினியை ஸ்டைலாகவும் அழகாகவும் சுறுசுறுப்பாகவும் 100 படங்களுக்கும் மேல் பார்த்துவிட்டோம். இனிமேலாவது அவரை இயல்பாக பார்க்க விரும்புகிறோம்.

இனிவரும் இயக்குனர்களாவது ரஜினியின் வயதுக்கேற்ற அழுத்தமான கேரக்டர் கொடுத்து அவரை செயற்கையாக இல்லாமல் இயற்கையாகவே காண்பிக்க முயற்சிக்க வேண்டும் என்பதே உண்மையான ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

விமர்சனங்களை வீழ்த்தி வசூல் சாதனை செய்த தர்பார்!

தர்பார் படக்குழுவை எச்சரித்த சசிகலா தரப்பு

About அருள்

Check Also

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 உயிரிழப்பு

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …