இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

‘குழப்ப’ உறுப்பினர் தர்சானந்துக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

- புளொட் அறிவிப்பு

கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை மீறிச் செயற்பட்ட, எமது கட்சியைச் சேர்ந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒற்றான புளொட் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ். மாநகர சபை உறுப்பினரான தர்சானந் ,சபை அமர்வின் போது எமது கட்சியின் கோட்பாடுகள் கொள்கைகளை மீறிச் செயற்பட்டிருக்கின்றார்.

இவருடைய அறிக்கைகள், பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் சம்மந்தமாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

மேலும் அந்தச் செயற்பாடுகள் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சிக் கொள்கைகள் ,கோட்பாடுகளை மீறுகின்ற வகையிலான இத்தகைய செயற்பாடுகளையும் சொல்லாடல்களையும் ஒரு போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சபையில் யாரேனும் எப்படியான ஆத்திரமூட்டும் சொல்லாடல்களைப் பாவித்திருந்தாலும் அதற்கு எதிராக எங்கள் கட்சிக் கொள்கைகளை மீறுகின்ற வகையில் செயற்படுவது அநாகரிகமானது என்பதுடன் எங்களுடைய அடிப்படைக் கொள்கைகளில் இருந்து முரண்பட்ட விடயமாகவே பார்க்கிறோம்.

இவை தொடர்பில் விளக்கம் கோரப்பட்டிருப்பதுடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்க இருக்கின்றோம். மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” – என்றார்.

Tags
Show More

Related Articles

Back to top button
Close