உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிப்பு..

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்கள் இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தில் நகர்ந்து சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் பூமியில் இருப்பது போன்று 3 பொருட்களை செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது. அவற்றில் அதிக அளவில் மீத்தேன் உள்ளது.

செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியை கியூரியாசிட்டி தோண்டியிருக்கிறது. பெரிய அளவில் தோண்டாமல் வெறும் 5 செ.மீட்டர் மட்டுமே தோண்டியுள்ளது. இதை வைத்து இன்னும் பல மாதங்களுக்கு ஆய்வு செய்ய நாசா முடிவெத்துள்ளது.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close