சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

அப்படியும் பெரிய வசூல் இல்லை – புலம்பும் விநியோகஸ்தர்கள் !

தர்பார் திரைப்படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவை விடக் குறைவாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9 ஆம் தேதி வெளியான தர்பார் முதல் நாள் சிறப்புக் காட்சி அமோகமான வரவேற்புடன் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் படத்திற்கு சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சிறப்புக்காட்சிக்கான் டிக்கெட் விலை 1000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை விற்கப்பட்டது.

ஆனால் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் வெளியானதை அடுத்து கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் சாதா விலைக்கு டிக்கெட் கிடைக்க ஆரம்பித்தது.

இதனால் விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் முதல் நாள் வசூலாக 16 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.

இது வழக்கமாக ரஜினி படங்களின் வசூலை விட மிகக்குறைவு என சொல்லப்படுகிறது.

‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்’ ராணுவ தளபதி உறுதி

Tags
Show More

Related Articles

Back to top button
Close