Breaking News
விஜயகாந்த் மருத்துவமனையில்

விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான சிகிச்சைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மேற்கொண்ட சிகிச்சையின் தொடர்ச்சியாகவே இந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக தேமுதிக விளக்கம் அளித்துள்ளது. விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று இரவோ அல்லது நாளையோ வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்த் திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம்; அவர் நலமுடன் உள்ளார் என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கமான சிகிச்சைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில், விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற பிரார்த்திப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …