முக்கிய செய்திகள்தமிழ்நாடு செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி நலம்: செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்

திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனினும், டிரகியாஸ்டமி சிகிச்சை முறை கருணாநிதிக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது, மருத்துவமனைக்கு சென்று டிரகியாஸ்டமி கருவியை திமுக தலைவர் மாற்றி வருகிறார்.

அந்த வகையில், காவேரி மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு டிரக்கியாஸ்டமி குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் பொருத்தப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் மாலையிலேயே அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு மீண்டும் உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என விளக்கமளித்துள்ளார். மேலும், கருணாநிதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், அச்சப்படத் தேவையில்லை எனவும் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

பன்னீர்செல்வத்தின் சகோதரரின் சிகிச்சைக்கு ராணுவ விமானத்தை அனுப்ப்பியது ஏன் என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், இந்த விவகாரம் தொடர்பாக நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
https://tamilnewsstar.com/headlines-news/m-k-stalin-is-not-happu-witth-karunanithi

https://tamilnewsstar.com/tamil-nadu-news/m-k-stalin-become-dmk-president

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close