Breaking News
திமுக தலைவர் கருணாநிதிக்கு

திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை?

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பத்தாவது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையையடுத்து அவரது உடல்நிலையில் மீண்டும் முன்னேற்றம் ஏற்பட்டது.

சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவரை மாநில, தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள், அண்டை மாநில முதல்வர்கள், திரைப்பிரபலங்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாக, உடனடியாக அதற்கான சிகிச்சையை அளிக்க மருத்துவர்கள் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வெளிநாட்டு மருத்துவர்கள் தலைமையிலான குழு கருணாநிதி சிகிச்சை தொடர்பானதை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், இதனையும் உடைத்தெறிந்து கருணாநிதி மீண்டும் நலம் பெறுவார் என திமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நேற்று மாலையில் மீண்டும் சற்று பின்னடைவு ஏற்பட்டதாகவும், குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக, மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருந்ததாகவும், அது சரி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …