Breaking News
திமுக தலைவர்

திமுக தலைவர் கருணாநிதியின் பல்ஸ் ரேட் என்ன சொல்கிறது: மருத்துவ ரீதியான தகவல்

திமுக தலைவர் கருணாநிதியின் பல்ஸ் ரேட் மூலம் பெறப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக தொற்று இருப்பதாக கூறப்பட்டது. அவரது உடல்நிலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பல்ஸ் ரேட் இயல்பு நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்தத் தகவல்கல் பின்வருமாறு,

சாதாரண மனிதனின் இதயத் துடிப்பு 60 – 100 வரை இருக்க வேண்டும், கருணாநிதிக்கு 87 உள்ளது. அதேபோல் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 94 – 99 வரை இருக்க வேண்டும், அவருக்கு 95 இருக்கிறது.

80 வயதுக்குமேல் சுவாச அளவு என்பது நிமிடத்திற்கு 10 – 30 வரை இருக்க வேண்டும், அவருக்கு 20 இருக்கிறது. இதன்மூலம் திமுக தலைவர் கருணாநிதிக்கு அனைத்துமே இயல்பு நிலையில் உள்ளது தெரிய வருகிறது. எனவே வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …