Monday , December 10 2018
Home / Headlines News / திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது; திருச்சி சிவா கோரிக்கைக்கு காங்.,வரவேற்பு
திமுக தலைவர்

திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது; திருச்சி சிவா கோரிக்கைக்கு காங்.,வரவேற்பு

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி., திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி, வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலிவால் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி., திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய தினபலன் – 10 டிசம்பர் 2018 – திங்கட்கிழமை

இன்றைய பஞ்சாங்கம் 10-12-2018, கார்த்திகை 24, திங்கட்கிழமை, திரிதியை திதி மாலை 05.50 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூராடம் …