Breaking News
ஸ்ரீரெட்டிக்கு

ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு தர வேண்டாம்

ஸ்ரீரெட்டிக்கு திரைப்பட வாய்ப்பு அளிக்காதீர்கள், அவருக்கு வாய்ப்பு கொடுப்பது தமிழ் சினிமாவில் ஒரு தவறான உதாரணத்தை உருவாக்கிவிடும் என்று நடிகர் ராகவா லாரன்ஸுக்கு வாராகி கோரிக்கை வைத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக்காக நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார்.

அதையடுத்து சில தெலுங்கு பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகர் சங்கம் அலுவலகம் முன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது தமிழ் திரை பிரபலங்களை டார்கெட் செய்துள்ள ஸ்ரீரெட்டி முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைச் சுமத்தி வருகிறார்.

’தமிழ் லீக்ஸ்’ சர்ச்சையை வைத்து தமிழ் திரையுலகை ஆட்டிப்படைக்கச் சென்னையில் முகாமிட்டுள்ள ஸ்ரீரெட்டி மீது நடிகர் வாராகி கமிஷனர் அலுவலகத்தில் விபசார வழக்குப் பதிவு செய்ய மனு அளித்தார்.

இதன் பிறகு நடித்து, நடனமாடி திறமையை நிரூபித்தால் வாய்ப்பு தருவதாகவும், உடனடியாக அதற்கான முன் பணத்தை தருவதாகவும் லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான வாராகி, ராகவா லாரன்ஸுக்கு தமிழ் திரையுலகம் சார்பாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதுபற்றி வாராகி கூறும்போது, “சினிமா துறையில் இதுவரை நடக்காத ஒரு விஷயத்தில் ஸ்ரீ ரெட்டி புதுவிதமான முயற்சி எடுத்திருக்கிறார்.

அதாவது சமூகத்தில் பிரபலமாக உள்ளவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சொல்லி, அதன்மூலம் மிரட்டி வாய்ப்பு தேடுவது என்கிற தவறான முன்னுதாரணத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாகப் பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மீது புகார் கூறிய இவர், தன்னிடம் ஆதாரம் உள்ளதாகக் கூறி, ஒரு திட்டத்துடன் தனது மிரட்டலைத் தொடர்ந்து வருகிறார். ஆனால் இதுவரை அப்படி எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.

இதிலிருந்தே சிலரை மிரட்டி பணம் பறிப்பது, அல்லது வாய்ப்பு கேட்பது தான் அவரது நோக்கமாக இருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது.

தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு திறமை இருக்குமேயானால், தனது படத்தில் வாய்ப்பு தர தயார் எனச் சமீபத்தில் கூறியிருந்தார்.

ஸ்ரீரெட்டிக்கும் அதுதான் நோக்கம் என்றால் அந்த வாய்ப்பை நேர்மையாக ஏற்று இருக்கவேண்டும்.

ஆனால் லாரன்ஸின் பெருந்தன்மையான செயலை முழுமனதாக ஏற்காமல் லாரன்ஸையே விமர்சித்துத்தான் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

ராகவா லாரன்ஸ் மிகவும் நேர்மையானவர். இந்தச் சமுதாயத்தில் சமூக சிந்தனையுடன் செயல்படக்கூடியவர்.

நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். இதையெல்லாம் தாண்டி மக்களால் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடிகராகவும் இருக்கிறார்.

அப்படிப்பட்ட ராகவா லாரன்ஸ், தனது பெருந்தன்மையை புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கும் ஸ்ரீரெட்டி போன்ற தவறான நபர்களுக்கு வாய்ப்பு தருவதை தவிர்க்கவேண்டும் என அவரிடம் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். ஆந்திராவில் பலர் மீது குற்றச்சாட்டுக்களை வீசிய ஸ்ரீ ரெட்டி, இனி அங்கே தனது பருப்பு வேகாது எனத் தமிழகத்திற்கு வந்துள்ளார்.

அப்படிப்பட்டவருக்கு வாய்ப்பு கொடுப்பது தமிழ் சினிமாவில் ஒரு தவறான உதாரணத்தை உருவாக்கிவிடும்.

நீங்கள் இந்தச் சமூகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்துகொண்டிருக்கும்போது, இது தவறான ஒரு நடைமுறையை உருவாக்கிவிடும்.. அதன்பின் ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பல்கள் பாரம்பரியமான தமிழ் சினிமாவில் உள்ளே நுழைய ஊக்கம் கொடுப்பது போலாகிவிடும். ஆகவே இதுபோன்ற நபர்களை தயவுசெய்து புறக்கணியுங்கள்..

இதை வாராகி என்கிற தனிப்பட்ட நபரின் கோரிக்கையாக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே உங்களிடம் வைக்கும் கோரிக்கையாக இதை நீங்கள் பார்க்கவேண்டும்… எங்கள் கோரிக்கையை நிச்சயம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம்” என்று தனது அறிக்கையில் வாராகி லாரன்ஸுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு லாரன்ஸின் பதில் என்னவாக இருக்கும்? அவரை வாராகியின் கோரிக்கையை ஏற்பாரா?போன்ற கேள்விகள் அவரது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

About அருள்

Check Also

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம்

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம்

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம் பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …