Breaking News
முக ஸ்டாலின்

முக ஸ்டாலின் திமுக தலைவர் பதவியை ஏற்பாரா?

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தலைவர் பதவியை முக ஸ்டாலின் ஏற்பது பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் மரணத்துக்கு பிறகு அக்கட்சி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

கலைஞர் சமாதியில் சிலர் மூடப்பழக்கங்களை பின்பற்றுவது பற்றி ஒரு சாரார் விமர்சித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கட்சிக்குள் முக அழகிரியால் பிரச்சனை ஏற்படும் என கூறப்பட்டது. திருப்பரங்குன்றம், திருவாரூர் என இடைத்தேர்தல்களை சந்திக்கும் முன் திமுகவின் தலைவர் பதவியை முக ஸ்டாலின் ஏற்பது பற்றி விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

ஆனால் திமுகவினரின் பெரும்பான்மையான கருத்து, முக ஸ்டாலினுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தயாநிதி அழகிரி திமுக தலைவர் பதவியை கலைஞரை தவிர யாராலும் நிரப்ப முடியாது.

அந்த பதவி அப்படியே இருப்பதே சிறப்பாகும் என கருத்து தெரிவித்துள்ளார்.

எது எப்படியாயினும் திமுகவுக்கு தலைவர் ஒருவர் அவசியம், எனவே முக ஸ்டாலின் இந்த பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக தலைவர் பதவியை ஏற்கும் அளவுக்கு அவரது அரசியல் அனுபவம் பக்குவப்பட்டுள்ளது என திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

எனவே ஆகஸ்ட் 28-ஆம் தேதி முக ஸ்டாலின் திமுக தலைவராவார் என எதிர்பார்க்கலாம்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …