உலக செய்திகள்முக்கிய செய்திகள்

ஈரானில் இனி நடக்கபோறது மட்டும் பாருங்க

டிரம்பின் டுவிட்டர் பதிவால் மிரண்டு போயிருக்கும் உலக நாடுகள்

அமெரிக்கா மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து இப்போது நடப்பது எல்லாம் நன்மைக்கே… நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடுவேன் என்ற அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நலையில், புதியதாக பதவியேற்றுள்ள ராணுவ தளபதி மற்றும் அந்நாட்டு அதிபர் விரைவில் விளைவுகள் மோசமாக இருக்கும்.

ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என்று அமெரிக்கா வேதனைப்படும் அளவிற்கு ஈரான் தாக்குதல் இருக்கும் என எச்சரித்தனர். இதனையடுத்து, அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் பதிலடி கொடுத்தார்.

இதனையடுத்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 80 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈராக்கில் உள்ள 2 அமெரிக்க விமானப்படை தளங்களை ஈரான் ஏவுகணைகளை வீசி சேதப்படுத்தியது பற்றி தகவல் அறிந்ததும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், அவரது டுவிட்டர் பக்கத்தில் ஆல் இஸ் வெல். ஈராக்கில் இருக்கும் 2 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரானுக்கு அமெரிக்காவை பற்றி இன்னும் புரியவில்லை. எங்களிடம் அனைத்து வகையான நவீன ஆயுதங்களும் உள்ளன.

உலகிலேயே சக்திவாய்ந்த ஆயுதங்களும் எங்களிடம் இருக்கின்றன. இதை ஈரான் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது பற்றி ஆய்வு செய்து வருகிறோம். நாளை காலை ஒரு அறிக்கை வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த டுவிட்டர் தகவல் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. நிச்சயம் அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தும், சும்மா இருக்காது, அதன் விளைவாக ஈரான் மீது பொருளாதார தடை வரலாம். எனவே, உலக நாடுகள் போர் அபாயத்தில் தற்போது இருக்கின்றன.

ஈராக்கை வாய்மொழியாக எச்சரித்த ஈரான்

Tags
Show More

Related Articles

Back to top button
Close