Saturday , July 20 2019
Home / சினிமா / காவியை எதிர்க்கிறாரா ரஜினி?
காவியை

காவியை எதிர்க்கிறாரா ரஜினி?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளால் பாஜகவை ரஜினி எதிர்க்கிறாரா என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்பி வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வசனத்தில் தொடங்கும் பேட்ட படத்தில் “ஒரு நல்லாட்சி எப்படி இருக்குமோ அப்படி தான் இனிமே இந்த ஹாஸ்டல் இருக்கும்.

புதுசா வருபவர்களை தொறத்துற அரசியல் இங்கு இருந்து தான் தொடங்குது. நான் நல்லவன் தான். ரொம்ப நல்லவன் கிடையாது.

எதிரியை சூழ்ச்சி பண்ணி வீழ்த்துறது தப்பே இல்ல” உள்ளிட்ட படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்கள் ரஜினி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இந்தப் படத்தில் சில காட்சிகளில் இந்து அமைப்பினர் போன்று செயல்படும் சிலர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காதலர்களை தாக்குவது போன்றும், அந்த அமைப்பைச் சேர்ந்த வில்லன்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று ரஜினி தாக்குவது போன்றும் காட்டியிருறார்கள்.

அதே சமயம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செயல்படும் சிலரை ரஜினி அடித்து நொறுக்குவார்.

நடிகர் ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது எனவும், அவரை வைத்து தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது எனவும் கூறப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றாற்போல், தமிழக பாஜக தலைவர்களும் ரஜினி குறித்து விமர்சனங்களை முன் வைப்பதில்லை.

மாறாக, அவருக்கு ஆதரவான கருத்துக்களையே கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பேட்ட படத்தில் இடம் பெற்றுள்ள இந்த காட்சிகள் மூலம், ரஜினி மறைமுகமாக பாஜகவை எதிர்க்கிறாரா என்கிற கேள்வி அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

வாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல்

வாழை மட்டையோடு கட்டி பசுக்கள் கடத்தல் : அதிர்ச்சி தகவல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!இந்தியாவில் பசுக்கள் புனிதமாகவும்,கடவுளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பசுக்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகத் …