இலங்கை செய்திகள்

மேலும் நான்கு வீடுகளில் மனித எச்சங்கள் காணப்படலாம் என சந்தேகம்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்தும் பதட்டத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் “லங்கா சதொச” விற்பனை நிலையத்தில் இருந்த அகழ்து எடுக்கப்பட்ட ஒரு தொகுதி மண் மன்னார் பொது மாயனத்தின் பின் பகுதியில் பாதுகாக்கப்பட்டிருந்தது மற்றைய மண் தொகுதியானது மன்னார் பிரதேசத்தில் உள்ள சில மக்களிடம் விற்பனை செய்யப்பட்டிருந்தது

கடந்த மூன்றாம் மாதம் 27 திகதி குறித்த மண்ணை கொள்வனவு செய்த மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த நபர் தான் கொள்வனவு செய்த மண்ணில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் காணப்பட்டதாக மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து அவ் வீட்டில் கொட்டப்பட்ட மண்ணில் உள்ள எலும்புகள்; சம்மந்தப்பட்ட அகழ்வு பணிகள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த வளாகத்திலும் அதே போன்று அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது சந்தோகத்திற்கு இடமான அதிகமான மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது குறித்த மனித எச்சங்கள் தொடர்பான உண்மை தன்மை பற்றி விசாரணைகளை மோற்கொள்ள உதவியாக

கடந்த மாதம் (30.05.2018) மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண்ணை பெற்றுக்கொண்ட மக்களை உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்

குறித்த வேண்டுகோளுக்கு அமைவாக விற்பனை நிலைய மண்ணை பெற்றுக்கொண்ட சின்னக்கடை உப்புக்குளம் பெரியகமம் மூர்வீதி ஆகிய கிராமங்களை சேர்ந்த நான்கு பேர் கிராம சேவர் ஊடாக வழங்கிய முறைபாட்டை தொடர்ந்து குறித்த தனியாருக்கு செந்தமான வீடுகளில் கொட்டப்பட்ட மண்ணை நேற்றைய தினம் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்

குறித்த மண்களிலும் மனித எச்சங்கள் காணப்படலாம் என அஞ்சபடுகின்றது..

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close