Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை
குடிபோதையில்

குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

திருச்செந்தூர் அருகேயுள்ள இராணிமகராபுரத்தில் திருமண வரவேற்பு வீட்டில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

திருச்செந்தூர் அருகேயுள்ள இராணிமகராஜபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் ராஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் வேல்குமார் குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வேல்குமாரை மர்ம நபர் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட வேல்குமார் அண்ணனான சரவணக்குமார், நாடார் மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளி யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பாருங்க :

மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா

சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக் பாஸ் பிரபலம்.

மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை!

ஜெர்மன் உதவியுடன் தமிழகத்தில் மின்சார பேருந்துகள்… ரூ.1,580 கோடி முதலீடு


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

Check Also

இடைக்கால

இடைக்கால அரசாங்கம் நாளை முதல்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இந் நிலையில் …